தேடுகிறவன் கண்டடைகிறான்


    தேடுகிறவன் கண்டடைகிறான்

 
மத்தேயு 7:7

 கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;

மத்தேயு7:8

 ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.

எப்பொழுது தேட வேண்டும் :

ஏசாயா 55:6

 கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.

நீதிமொழிகள் 8:17

  என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.

அப்போஸ்தலர் 17 :27 

கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.
 

எப்படி தேட வேண்டும் :

எரேமியா 29 :13

 உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.

யார் நன்மையாகிய கர்த்தரை கண்டடைவதில்லை :

நீதிமொழிகள் 17:20 

மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான்.

 கர்த்தரை கண்டடைவதினால் உண்டாகும் நன்மை என்ன :

நீதிமொழிகள் 8:35

என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.

கர்த்தரை கண்டடைவதினால் உண்டாகும் நன்மையோ நித்தியஜீவன்

I யோவான் 2:25

 நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.


 

Comments

Popular posts from this blog

CHAPTER 1 - We can make our plans, but the LORD determines our steps.

CHAPTER 2 - Hating Your Life to Keep It for Eternal Life? - John 12:25

CHAPTER 3 - Behold The Lamb Of God! - John 1:29